டாக்டர்  சொல்வதைக் கேளுங்க!

முழு உடல் பரிசோதனை  பண்ணுங்க!!

தம்பி இது ரத்த பூமி, இங்க அறிவாள்ள பல்லு வெலக்கி வெடி குண்டுலே கொழம்பு வெப்போம்

1. முழு உடல் பரிசோதனை ஏன் முக்கியமாகிறது?

       சில சமயம் சில நோய்கள் எந்த அறிகுறியும் இல்லாமல் நம்மை பாதிக்கக்கூடும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது நம்மை பல்வேறு இன்னல்களிருந்து காக்கிறது.

2. முழு உடல் பரிசோதனை என்றால் என்ன?         

         முழு உடல் பரிசோதனை ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இது உடல் ரீதியான சோதனைகள்,ஆய்வுகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளை உள்ளடக்கியதாகும்.

 நோய்வாய்ப்பட்டவருக்கு அல்லது நோய் அறிகுறி உள்ளவருக்கு செய்யப்படும் பரிசோதனைகளிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டதாகும்.

 உண்மையில், நலமாய் இருப்பவருக்கும் அல்லது நலமாய் இருப்பது போல் தோன்றுபவருக்கும் முழு உடல் பரிசோதனை  அவசியமாகிறது.

3. நான் ஏன் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?

நாம் நலமாய் இருக்கலாம். ஒரு  குறிப்பிட்ட நோய்க்கான எந்த அறிகுறியும் நமக்கு இல்லாமல் இருக்கலாம்.  இருந்தபோதிலும்  நாம் ஏதாவது  நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறோமாஇல்லையா என்பதை உடல் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடுகிறது. ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதும், தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பின் மூலம் நோயைக் குணப்படுத்துவதும் பிற்காலத்தில் நமக்கு ஏற்படக்கூடிய அநேக அசௌகரியங்களை களைகிறது. எனவே, நாம் நலமாய் இருந்த போதிலும் முழு உடல் பரிசோதனை நமக்கு முக்கியமாகிறது.

4.எந்த விதமான பரிசோதனைகளை நான் மேற்கொள்ள வேண்டும்?

பரிசோதனைக்கு முன்பு தங்களின் மருத்துவரைக் கலந்து ஆலோசியுங்கள். தங்களின் வயது, பாலினம், வாழ்க்கை முறை, தங்களின் மருத்துவ வரலாறு  போன்றவைகளை கவனத்தில் கொண்டு எந்த விதமான  பரிசோதனைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைப்பார்.

இதில் பல்வேறு விதமான பரிசோதனைகள உள்ளன.
எல்லோருக்கும் பொதுவானது.
இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு என்று பல்வேறு பிரிவினருக்கும் பல்வேறு விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  •     18 லிருந்து 40 வயது வரை உள்ளவர்களுக்கு குண்டாவதற்கான காரணங்கள் போன்றவை ஆராயப்படுகின்றன.
  • 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பரிசோதனை செய்வது கொள்வது நல்லது.
  • 25-69 வயது வரையிலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், செர்விகல் புற்றுநோய் போன்றவைகளுக்கு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
  • பச்சிளங்குழந்தைகளுக்கு  காது கேளாமை மற்றும் மரபு வழியான குறைபாடுகள் போன்றவைகளுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன.   

முக்கியமான விஷயம் என்னவெனில், பரிசோதனைக்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

 5. முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய பரிசோதனை முடிவுகள் சரியான அளவில் அல்லது மத்திம அளவில் இருக்கும் பட்சத்திலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஏனெனில், அந்த முடிவுகள் பரிசோதனை செய்யும் போது இருந்த உடல் நிலையைப் பொறுத்தது. பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள். அடுத்த பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டாம்.
உங்களுடைய பரிசோதனை முடிவுகள் சரியான அளவில் இல்லாமல் இருந்தால் அல்லது தீவிர நிலையில் இருந்தால் உடனடியாக உங்களின் மருத்துவரின் ஆலோசனைப் படி நடுவுங்கள். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து அதனை குணப்படுத்துவது எளிது. இது பின்னாளில் ஏற்படக்கூடிய அநேக அசௌகரியங்களை தடுக்கிறது.

6.நான் ஏன்  தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால அளவில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?

       ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் போது அப்போதைய உடல் நிலையை அறிந்து கொள்ள முடியும். தொடர்ச்சியாக வருடா வருடம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளும் போது நமது நோயின் தீவிரத்தை நம்மால் கண்காணிக்க முடியும். தொடர்ச்சியான் கண்காணிப்பு நமக்கு நல்ல பலன்களைத் தரும்.

எவ்வளவோ பண்ணிட்டோம் இதைப் பண்ண மாட்டமா?

0 comments:

கருத்துரையிடுக