டாக்டர்  சொல்வதைக் கேளுங்க! 

பற்களை  பாதுகாத்திடுங்க!!


 பொதுவாக நாம் வாய்ச் சுகாதாரம் எனப்படும் ORAL HEALTH க்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், உண்மையில் நமது உடல் நலனை காப்பதில்  வாய்ச் சுகாதாரம் முக்கிய பங்காற்றுகிறது.  நமது வாய்ச் சுகாதாரத்தைப் பற்றிய தவறான புரிதல்களையும் நாம் கொண்டுள்ளோம். எனவே இதைப் பற்றி மேலும் அறிதல் பொருட்டு கோவை, காளப்பட்டி ரோட்டில் உள்ள SPAARK DENTAL CLINIC ஐ சேர்ந்த Dr.கார்த்திகேயன் அவர்களை சந்தித்தோம்.

 டாக்டர்.R. கார்த்திகேயன் M.D.S., 
இவர் குழந்தைகளுக்கான பல் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் தொடர்புக்கு விறலியை சொடுக்கவும் http://spaarkdental.com/
PH:98888 88552


1.பற்காரை (TARTAR) என்றால்  என்ன? அதனை எவ்வாறு நீக்குவது?
          நாம் உணவு உண்ணும்போது உணவுத் துணுக்குகள் கால்சியத்துடன் வினை புரிந்து நமது பற்களில் காரையாய் படிகின்றன. நாம் சாதாரணமாக  பிரஷ் செய்யும் போது இது நீங்குவதில்லை. அவை கடினமாய் இருப்பதால் பல் மருத்துவர் மட்டுமே நவீன கருவிகள் துணை கொண்டு அதனை களைய முடியும்.  பற்காரையிலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது பல்வேறு ஈறு நோய்களுக்கு காரணமாகிறது.

2. தீவிரமாக பாதிக்கப்பட்ட பற்களை 

    சரிசெய்ய முடியுமா?

          நவீன பல் மருத்துவத்தில் இது சாத்தியமே! தற்போது இதற்கான புதிய சிகிச்சை முறைகள் உள்ளன. உங்கள் பல் மருத்துவரை கலந்து ஆலோசித்த பின் சரியான முடிவை எடுக்கவும்.

3.ஈறு நோய் என்றால்  என்ன?

    அந்த நோய்க்கான அறிகுறிகள் என்னன்ன?

          நாம் உண்ணும் உணவின் மென்மையான மற்றும் கடினமான உணவுத் துணுக்குகள் நமது பற்களில் சிக்கிக் கொள்கின்றன. பாக்டிரியாககள் அவற்றுடன் வினை புரிகின்றன. இதன் மூலம் ஈறுகளில் வலி, ஈறுகள் சிகப்பாதல்  மற்றும் ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.  இவ்வாறுதான் ஈறு நோய் ஆரம்பமாகிறது. சரியாக கவனிக்காத பட்சத்தில் ஈறுகளுக்கு அடியிலுள்ள எலும்புகளுக்கும் பரவுகிறது. விளைவு? நாம் நமது பற்களை இழக்க நேரிடலாம்.

4. FLOSSING என்றால் என்ன? 

   அதன் பயன்கள் என்ன?
 
           FLOSSING என்பது விசேஷமாக உருவாக்கப்பட்ட ஒரு நூல். இரண்டு பற்களுக்கிடையே உள்ள அழுக்கை அகற்ற உதவுகிறது. இந்த நூலை இரு பற்களுக்கிடையே செலுத்தி முன்னும் பின்னும் இழுப்பதன் மூலம் பற்களை சுத்தம் செய்ய முடியும். இவ்வாறு FLOSSING செய்வதன் மூலம் பற்களின் இண்டு  இடுக்குகளிள் உள்ள அழுக்கைக் கூட அகற்ற முடியும். இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய பற்சிதைவை தடுக்க முடியும்.

5. கிளிப் அணிவதற்கு எது சரியான வயது?
            பொருந்தாப் பல் அமைப்பு (malocclusion) என்பதை நாம் கண்டறிந்த உடனேயே பல் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தையின் 12-13 வயதினை சரியான வயது எனறு நினைக்கிறார்கள். இது தவறு. அந்த வயதுகளில் குழந்தையின் வளர்ச்சி என்பது அநேகமாக முழுமை அடைந்திருக்கும். எனவே அதன் பொருட்டு அறுவை சிகிச்சை தேவைப் படலாம்.

6.எப்பொழுதிலிருந்து  நான்  பல் மருத்துவரை 

   பார்க்கத் தொடங்க வேண்டும்?
                        உண்மையில்  நமது  பல் மருத்துவருடனான  சந்திப்பு  நாம் குழந்தையாய் இருக்கும் போதே தொடங்கப்  படவேண்டும்.  குழந்தைக்கு ஆறு  மாதம் தொடங்கும் போதோ அல்லது முதல் பல் தோன்றும் போதோ நாம் நமது பல் மருத்துவரை கலந்தோலோசிக்க  வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனைக்கு செல்ல வேண்டும். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது  நமது  பற்களைப்  பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.


நாங்கல்லாம் பொறக்கும் போதே  பல்லோட பொறந்தவங்க 


 








0 comments:

கருத்துரையிடுக